செய்திகள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை

Makkal Kural Official

சென்னை,பிப்.6–

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் இருந்தோ இந்த மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? “போலீசுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்” என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தி உள்ளதற்கு தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும்.

போதாக்குறைக்கு, “தி.மு.க. கட்சிக்காரன்” எனும் அடையாளம் வேறு. தி.மு.க. என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் போலீஸ் துறை கண்டுகொள்ளாதா? தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் தி.மு.க.வினர் செய்வதற்கு தானா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *