கோவை, ஜூலை 2–
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ஜூலை மாதம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் – ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை செய்துள்ளது.
ரத்து–மாற்றம்
இதன்படி, கோவை-சேலம் ரயில் (06802), சேலம் – கோவை ரயில் (06803) ஆகியவை இன்று முதல் 31ம் தேதி வரை (நடப்பு மாதம் முழுவதும்) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பெங்களூரு- கொச்சுவேலி சிறப்பு ரயில் (06084) இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் உள்ள புதன்கிழமைகளில் குறிப்பிட்ட இம்மார்க்கத்தில் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படுகிறது.
எனவே இதனால் ஏற்படும் அசவுரிகத்தை பொறுத்துக் கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.