செய்திகள்

சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா

சேலம், ஜூன் 30–

சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 டாக்டர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது.

பின்னர் நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 262 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *