செய்திகள்

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் நடமாடும் நூலகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச்.2-

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் ‘கலைஞர் நடமாடும் நூலகம்’ பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 7 வார்டுகள் உள்ளன. இந்த 7 வார்டுகளில் நாளொன்றுக்கு ஒரு வார்டு என இந்த நடமாடும் நூலகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் செல்லும்.

இந்த நடமாடும் நூலகத்தில் பயனாளர்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் குறித்து சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு 9176991768 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

கலைஞர் நடமாடும் வாகனம் மூலம் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களைப் பெற்று, படித்து ஒரு வாரத்திற்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பிற புத்தகங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அவையும் உடனடியாக வழங்கப்படும். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து 50 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *