ஆர். முத்துக்குமார்
ஒரு நாள் போட்டிகளின் உலகக் கோப்பை இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அதில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு பதில் சற்று கவலை தரும் விதமாகவே இருக்குமோ? என்ற அச்சக் கேள்வியை சமீபத்து ஆஸ்திரேலிய தொடர் தோல்வி சுட்டிக் காட்டுகிறது.
1–-1 என்று சமநிலையில் இருந்த தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே துவங்கியது.
இந்திய மண்ணில் இந்தியாவை ஒரு நாள் போட்டியில் வீழ்த்தும் அணி ஒன்று தான் ? அது ஆஸ்திரேலியா! அவர்களுடன் இந்திய அணிக்கு பலமுறை வெற்றி வாய்ப்பை வழங்கிய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இம்முறை இறுதிப் போட்டி என்பதால் இந்திய தரப்பில் வெற்றி எதிர்பார்ப்பு நிரம்பவே இருந்தது.
அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் போட்டிக்கு முன்பு சுட்டிக்காட்டியது. அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டிகளில் வென்றது போல் ஒரு நாள் போட்டியிலும் வென்று விடுவோம் என்று உறுதியாக நம்பினார்.
2009க்குப் பிறகு நம் மண்ணில் நடைபெற்ற 27 ஒரு நாள் தொடர்களில் 3 தொடர்களில் மட்டுமே தோல்வியை கண்டுள்ளோம்.
அதில் இரண்டை ஆஸ்திரேலிய அணியும்m ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளது.
இம்முறை சென்னை ரோகித் சர்மாவிற்கு சாதகமாக இன்றி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு சாதகமாக மாறியது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனை தரலாம். ஆனால் ஆஸ்திரேலியா எப்படி ஜெயித்தது? என்பதை ஆராய்ந்து பார்த்தால் வெற்றியை அவர்கள் மிக கவனமாக ஆடியதுடன், இந்திய அணியின் பலவீனத்தை அறிந்து அதைத் தாக்கிய ஒரு வழியாக வென்றுள்ளனர்.
முதல் போட்டியில் மிகத் திறமையாக நமது பேட்ஸ்மேன்கள் ஆடியதால் வென்றோம்.
2வது போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரிடம் சுருண்டனர். இந்தியாவின், முன்னணி நட்சத்திர வீரர்கள்.
சேப்பாக்கம் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களைவிட சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒரு லெக்ஸ்பின்னரையும் களம் இறக்கினர் ஆஸ்திரேலிய அணி!
ஆகவே ஷேன் வார்ன் கால யுக்தியை ஆஸ்திரேலிய அணி பின்பற்றி சுழல் பந்தை எளிதில் எதிர்கொள்ளும் இந்திய அணியை வீழ்த்தி விட்டனர்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, கோலி மற்றும் எவரேனும் ஒரு ஆதிக்கம் செலுத்தியக் கட்டத்தில் யாரேனும் ஒருவர் சதம் அடித்து விடுவார்கள்.
இம்முறை ரோகித், கோலியால் 3 போட்டிகளில் ஒன்றில் கூட சதம் அடிக்க முடியவில்லை! அவர்களது 3 போட்டிகளில் எடுத்த ரன் வெறும் 150க்கும் குறைவே!
2வது போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கிடம் முக்கிய வீரர்கள் அவுட் ஆகி விட்டனர்.
சேப்பாக்கத்திலோ ‘ லெக்ஸ்பின் ‘ ஜாம்பவானிடம் சுழன்று வீழ்த்தப்பட்டனர். சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களால் கூடப் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. இந்தத் தொடரில் 3 ஆட்டங்களிலும் ஜடேஜா 79 ரன்களும், கிலோ 50 ரன்களும், பாண்டியாவால் 66 ரன்களும் மட்டுமே அடிக்க முடிந்தது.
நன்கு ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயரால் இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை, அவருக்குப் பதிலாக களம் இறக்கப்பட்ட சூர்யகுமார் யாதவுக்கோ இப்போட்டி தொடர் கெட்டக் கனவாக மறக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. அவர் 3 போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்காது அதிர்ச்சியை தந்துள்ளார்.
இந்திய அணியின் ஓப்பனர்களை ரன் அடிக்க விடாது செய்ததுடன் அவுட் ஆக்கிய வேதப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் டாப் ஆர்டரின் திறன் குறைவை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை அவுட் ஆக்கி விட்டார்.
மேலும் மொத்த அணியின் ஸ்பின்னை சமாளிக்க முடியாத திறனை ஆடம் ஜமபா அனுபவமிக்க பல பேட்ஸ்மேன்களை திணற வைத்து பலரை வீழ்த்தியும் உள்ளார்.
கடைசி ஒரு நாள் போட்டி துவங்கும் முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட், 2013 உலகக் கோப்பை போட்டியில் விளையாட 17 ஆட்டக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள் என பயிற்சியாளர் டிராவிட் கூறியிருந்தார்.
முன்பு இருந்த அணியின் வெற்றி உறுதி என நம்ப முக்கிய காரணங்களில் ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள் தளர்வு செய்யப்பட்டு வருவதையும் மறந்து விடக்கூடாது.
தோல்வியை தழுவிட இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் பட்டியலில் இருந்து டிராவிட் 17 ஆட்டக்காரர்களை உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்து இருந்தாக வேண்டும்.
அடுத்த 3 மாதங்களுக்கு ஐபிஎல் திருவிழா முடிந்த பிறகு இதே தோல்வியுற்ற அணி மீண்டும் எழுந்து வெற்றி அணியாக மாறியாக வேண்டும்.