செய்திகள்

‘செஸ் ஒலிம்பியாட்’ கலை நிகழ்ச்சி: கலைஞர்களுக்கு கொரோனா உறுதி

சென்னை, ஜூலை 28–

செஸ் ஒலிம்பியாட் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. மாமல்லபுரத்தில் இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட் ரிசார்ட் 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் மூன்று அணிகளும், மகளிர் பிரிவில் மூன்று அணிகளும் பங்கேற்க உள்ளன.

4 பேருக்கு கொரோனா

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வருகிறார்.

பிற்பகல் 3 மணியில் இருந்து இந்திய பண்பாட்டையும் , கலையையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இப்போட்டியினை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 900 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் நான்கு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நால்வரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.