வாழ்வியல்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழலாம்! உயிர் வாழ அடிப்படை கூறுகள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் எப்போதாவது உயிரினங்கள் இருந்ததா என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கு உயிர்கள் வாழ் சாத்தியக்கூறுகள் உள்ளன என கண்டறிந்த ஒரு சிறிய, ஆறு சக்கர ரோபோவுக்கு நன்றி கூற வேண்டும்.

ஆகஸ்ட் 6, 2012 அன்று தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் வட்டமான கூழாங்கற்களைக் கண்டுபிடித்தது. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகள் அங்கு பாய்ந்தன என்பதற்கான புதிய சான்றுகள் அவை.

மேலும் 2014 ஆம் ஆண்டில், உயிரினங்களின் அடிப்படை தொகுதிகள் என நாசா அழைக்கும் சிக்கலான கரிம மூலக்கூறுகளையும் கியூரியாசிட்டி கண்டுபிடித்தது. கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி

பிரபஞ்சத்தில் நீண்டகாலமாக நமது கிரகம் தான் தனித்துவமானது என கூறிவந்தோம். ஆனால் அவதானிப்புகளை உடைத்தெறிந்த கெப்லர் விண்வெளி தொலைநோக்கிக்கு நன்றி கூறவேண்டும்.

2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கெப்லரின் பணி நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே 2,600 க்கும் மேற்பட்ட கிரகங்களை அடையாளம் காண உதவியது. எக்ஸோப்ளானெட்டுகள் என்றும் அழைக்கப்படுகிற இவ, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கிரகம் இருப்பதாக வானியலாளர்கள் நம்புகிறார்கள். அதாவது அங்கே பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன.

கெப்லரின் வாரிசான டெஸ் 2018 ஆம் ஆண்டில் நாசாவால் செலுத்தப்பட்டது. இதன்மூலம் வேற்று கிரக வாசிகளுக்கான சாத்தியங்களை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் இந்த தசாப்தத்திலிருந்து ஒரு நிகழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி மற்றவற்றை காட்டிலும் விட உயர்ந்தது. செப்டம்பர் 14, 2015 அன்று முதன்முறையாக ஈர்ப்பு அலைகள், பிரபஞ்சத்தின் ஊடே சிற்றலைகளைக் கண்டறிந்தது தான் அந்த நிகழ்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *