கதைகள் சிறுகதை

செவ்வாய் கிரகத்தில் மங்களா பாட்டி – ஆர். வசந்தா

Makkal Kural Official

இப்போது இந்தக் கிரகம் எப்படியெல்லாம் மாறியுள்ளது.

சிவநேசன் கூறிய பல விஷயங்கள் மங்களாவை யோசிக்க வைத்தது. 1000 ஆண்டு மனிதன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார் என்பதைப் பார்க்கிறோமே. நம்ப முடியவில்லையே. முந்தைய நிலை எப்படியிருந்தது என்று சொல்லச் சொன்னாள் பாட்டி.

நாங்ள் வந்து இறங்கியபோது சில குரங்கு போன்ற உயிர்கள் மட்டும் உலாவின. சில நூற்றாண்டுகள் கழித்தவுடன் சில மனிதர்கள் போன்ற உருவங்கள் உலாவின. பல மாற்றங்கள் நிறைய நடந்தன. முதலில் தண்ணீர் உருகி ஓட ஆரம்பித்தன. எல்லாம் செயற்கை முறையால் தான்.

அவ்வப்போது சில ஜீவநீர்கள் நான் செய்த சிவலிங்கத்திலிருந்து வடிந்தன. அவற்றை பருகியவுடன் உடல் சக்தி பெருகிறது. பசி, தாகம் எதுவும் ஏற்படவில்லை. அதன் சக்தி அப்படியாக இருந்தது.

நான் விதைத்திருந்த சோளம், பச்சை மிளகாய் போன்றவை துளிர்த்தன. எல்லாம் தண்ணீர் ஓடியதால் தான். சப்போட்டா பழ விதைகளும் மாம்பழ கொட்டைகளும் அதிவிரைவாக வளர்ந்ததுடன் அல்லாமல் பலன் கொடுக்கவும் ஆரம்பித்தன. நான் மிகவும் ரசித்துச் சாப்பிட்டேன். ஒரு நாள் சில மீன்கள் ஒரு தண்ணீர் நிறைந்த குளத்தில் மிதந்து வந்தன. நான் உயிரோடு இருந்ததையும் இது எப்படி வந்தன என்றும் ஆராய்ந்தேன். ஒன்று பலவாகப் பெருகின. நான் அவற்றில் பச்சை மிளகாயுடன் சேர்த்துக் காய வைத்து அந்த சீதோஷணத்தில் மீண்டும் காய வைத்து சாப்பிட்டேன். எனினம் சத்தம் எப்போதாவது உணர்ந்தேன். எனினும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

நான் தங்கியிருந்த பூமியின் அடியில் சில தமிழ் சொற்களும் வேற்று மொழி சொற்களும் கேட்டேன். நான் மட்டும் ஒரு கூர்மையான கல்லால் ஓட்டைபோட்டேன். ஒரு சிறிய கடுகளவு ஓட்டை விழுந்தது. அந்த துளையிலிருந்து பார்த்த காட்சி என்னை வியக்க வைத்தன. மக்கள் உடைகள் மாறியிருந்தன. குழாய் போன்ற கால் சாராய்களும் மேல் துணிகள் வித்தியாசமாக இருந்தன. கையில் ஏதோ ஒரு சிறிய கருவியின் மூலம் ஒருவருக்கொருவர் பேசினார்கள். அதன் பெயர் செல்போன் என்று தெரிந்து கொண்டேன்.

ஒரு தமிழர் மூலம் நான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். துவாரம் பெரிதாக்கிக் கொண்டேன். அந்தப் பக்கம் ஒரு தமிழரிடம் ‘ஐயா, ஐயா’ என்று கூப்பிட்டேன்.

அவர் என்னையும் கவனித்து விட்டார். ரகசியமாகப் பேசினோம். இங்கு உள்ளே என்ன நடக்கிறது? என்று வினவினேன்.

இந்த கிரகம் ஒரு பப்பாளி பழம் போல நீங்கள் தங்கியிருக்கும் பகுதி அதன் தோல் போல் அது மிகவும் வறண்ட பகுதி. அந்த பழத்தின் அடுத்த பகுதி மனிதர்கள் வாழத் தகுதியான சதைப் பகுதி போல. உள்ளே இருக்கும் விதைப்போன்ற பகுதி உள்ளது. மிகவும் விளையுயர்ந்த தாதுப் பொருட்கள் உள்ளன. சிலிகான், மைக்கா, ஜிப்சம் அணுகுண்டு தயாரிக்க உதவும் யுரேனியம் இவை தவிர பல மினரல்களும் கொட்டிக் கிடக்கின்றன.

முதலில் ஒரு வானஊர்தியைக் கண்டுப்பிடித்தார்கள். அதில் ஏறி கிரகங்கள் சென்று வந்தார்கள். அதெல்லாம் மனிதன் வசிக்க தகுதியில்லாமல் இருப்பதை உணர்ந்தார்கள். நமது பூவுலகம் வசிக்கத் தகுதியுடனிருந்தது. மானிடர்கள். அவர்கள் ஜப்பானிலிருந்து விஞ்ஞான பொருட்கள் தயாரித்தார்கள். டிவி என்று ஒன்று உள்ளது. அதன் மூலம் சினிமா காட்சிகளை கண்டு மகிழ்ந்தார்கள்.

மேலும் சக்திவாய்ந்த ஒளிக்கற்றைகள் (லேசர்) கண்டுபிடித்தார்கள். அதன் மூலம் எல்லா நாட்டின் திறமைகளையும் கண்டு நாங்களே கற்றுக் கொண்டனர். அமெரிக்கா செல்வச்செழிப்பையும் படம் பிடித்தனர். இந்தியாவில் உள்ள ஆன்மீக வளர்ச்சியைப் பார்த்து பிரமித்தனர். எங்கும் சிவலிங்கங்களை அங்கு அமைத்தனர். அதில் வடியும் ஜீவநீர் எந்த நோயையும் தடுத்துவிடும் ஆற்றலை கண்டு வியந்தனர். அதையே மருந்தாகவும் தேவாமிர்தமாக எண்ணி தங்களைப் புதுப்பித்துக் கொண்டனர்.

இன்னும் ஒரு புதுமையும் செய்தனர். அது தான் முக்கியமான செயல்திறமையாகும்.

முக்கியமான அறிவுத்திறன் கொண்ட இறந்த மனிதர்களின் மூளை படிவங்களை லேசர் மூலம் படம் பிடித்து ‘சிப்’களாக மாற்றி அங்குள்ளவர்களின் தலைக்குள் பதித்துவிடுங்கள். எல்லோருமே பெரிய Legendகளாக இருப்பார்கள்.

விவாசயத்துறை – நம்மாழ்வார்

பத்திரிகைத்துறை – M.S.

சினிமாத்துறை – M.G.R.

வாகனத்துறை – G.D.Naidu

அணுசக்தித் துறை – A.P.J. Abdul Kalam

நடனம் – Padmini

இப்படி பல துறை வல்லுநர்கள் இறந்தவுடன் அவர்கள் மூளை கிரகத்திற்கு லேசர் மூலம் படிவங்களாக கொண்டு போய்விடுவார்கள். அந்த கிரக மக்களின் மூளையில் பதிந்தவுடன் அந்தந்த மனிதர்களாக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் எல்லாம் அந்த உருவ தோற்றத்திலேயே சாதிப்பார்கள்; நடமாடுவார்கள்.

ஜப்பான் அறிஞர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர். நம் மக்கள் இங்கு மனதில் பதிந்தது போல் அங்கும் உலவுகிறார்கள்.

அந்த கிரகத்தின் தலைவர் பெயர் ‘கிக்கிடமான்’’ அந்த கிரகத்தின் ரகசியங்கள் கொஞ்சம் வெளியேறுகிறது என்று எப்படியோ அவனக்குப் புரிந்து விட்டது.

அதைத் தடுக்க அவன் என்ன முடிவு செய்தான்!

அதை அடுத்த பகுதியில் காணலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *