செய்திகள்

செவ்வாய்க் கோளில் நில அதிர்வு: நாசாவுக்கு தகவல் சொன்ன ரோவர்

வாஷிங்டன், ஏப். 3–

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதை நாசாவின் ‘இன்சைட் ரோவர்’ பதிவு செய்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோபல்யூஷன் லேபரட்டரி, ‘இன்சைட் ரோவர்’ என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. 2ஆண்டுகளாக இந்த சிறிய கருவி செவ்வாய் கிரகத்தில் தான் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் முக்கிய தகவல்களைத் திரட்டி அவ்வப்போது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவரும் இந்த சிறிய ரக ரோவர், அண்மையில் நாசாவில் நில அதிர்வு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது. பொதுவாக ஒரு கோளின் அடி ஆழத்தில் உள்ள நிலத் தகடுகளின் நகர்வால், நில அதிர்வு ஏற்படும். இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும்.

5 ரிக்டரில் நில அதிர்வு

பூமியில் ஏற்படும் நில அதிர்வு போல செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. செவ்வாய் கோளின் சர்பேரோஷ் ஃபோசா என்கிற பகுதியில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர். 2030 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா கனவுத் திட்டமாக வைத்துள்ளது. இதனை நிறைவேற்ற இந்த சிறிய தகவல்களே நாசா விஞ்ஞானிகளுக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *