சிறுகதை

செல் நம்பர் – ராஜா செல்லமுத்து

பிரபலமான ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நாராயணன். ஒரு கட்டத்தில் அங்கிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது .

அவரில்லாமல் அந்த அலுவலகத்தில் எந்த ஒரு வேலையும் நடக்காது. அலுவலக நிர்வாகத்திற்கும் நாராயணனுக்கும் அப்படி ஒரு இணைப்பு இருந்தது. அலுவலகத்தின் அடி முதல் நுனி வரை நாராயணன் செல்போன் நம்பர் தான் அத்தனை பேருக்கும் அத்துபடி.

அந்த நிறுவனத்திற்கு முதலில் யார் பேசுவதென்றாலும் கூட முதலில் நாராயணன் செல்போனில் பேசி விட்டுத்தான் மற்றபடி மற்றவரிடம் பேசுவார்கள்.

அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் நாராயணன் இந்த நம்பர் பரிச்சயம்.

நாராயணனிடம் ‘‘ முதலாளி வேலையா இருக்காரா?’’ என்று ஒருவர் கேட்டதும்

இப்பக் கொஞ்சம் பிஸியா இருக்கார் ; அப்புறம் பேசுறீங்களா? என்று பதில் சொன்னார் நாராயணன்.

ஓகே நாராயணன் ; நான் அப்புறம் பேசுறேன் . அதுக்குத்தான் நேரடியா முதலாளி கிட்ட நான் பேசுறது இல்ல . உங்க கிட்ட பேசிட்டு அதுக்கப்புறம் தான் முதலாளி கிட்ட பேசுவேன்.

என்ன முதலாளி நம்பர் நம்மகிட்ட இருக்கு. அப்படிங்கறதுகாக நேரடியா நான் பேசுறது இல்லை. அவருடைய வேலைய தெரிஞ்சிகிட்டு தான் பேசுறது நல்லது என்று முதலாளியை கேட்டவர் பதில் சொன்னார்

நாராயணன் ஒருமுறை உண்மை சொல்வார் ; பல நேரங்களில் பொய் சொல்வார்.

ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் இது தப்பில்லையா? என்று யாராவது கேட்டால்

எல்லா நேரத்துலயும் உண்மை சொல்ல கூடாதுங்க . உண்மை சில நேரங்களில் சுடும். ஆனா பொய்தான், சில நேரம் நம்மை காப்பாற்றும். இது முதலாளிக்கு செயற துரோகம் இல்ல ; முதலாளிக்கு செய்ற நல்லது ‘. அவ்வளவு பேரையும் ஒரு தனிமனிதன் பார்க்கிறது அப்படிங்கறது சாதாரண விஷயம் இல்லை. அதனால்தான் சில நேரங்களில் பொய் சொல்லுவேன். சில நேரங்களில் உண்மை சொல்லுவேன் என்று நாராயணன் பதில் சொல்வார்

அப்படி அந்த நிறுவனத்தின் எல்லாம் வளர்ச்சிகளிலும் நாராயணன் நம்பர் தான் பரிச்சயமாக இருந்தது.

இப்படி போய்க் கொண்டிருந்த நிறுவனத்தில் ஒரு நாள் நாராயணனைப் பிடிக்காமல் போனது.

நாராயணன் நீங்க வேலைய விட்டு போகலாம் என்று வெளிப்படையாகவே நிறுவனத்தார் சொன்னார்கள்.

ஓகே சார் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று நாராயணன் கேட்டார்.

காரணம் எல்லாம் தெரியாது உங்களை எங்களுக்கு பிடிக்கல; அவ்வளவுதான். .நீங்க போகலாம் என்று நிர்வாகத்தினர் நாராயணன் முகத்துக்கு நேராக சொன்னார்கள்.

சரி நான் போறேன் என்றார் நாராயணன்

நீங்க போறது முக்கியமில்லை ; உங்க செல்போன் நம்பரை எங்க கிட்ட கொடுத்துட்டு போங்க என்று சொன்னார்கள் நிர்வாகத்தினர்.

ஏன் சார்? என்னாச்சு செல்போன் நம்பருக்கும் நான் வேலையை விட்டு போறதுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டார்.

இந்த நம்பர் என்கிட்ட கொடுத்துடுங்க. ஏன்னா இந்த நம்பர் வச்சுத்தான் எங்க நிர்வாகத்தில் இருக்கும் போது நீங்க பேசுறீங்க . அத்தனை பேருக்கும் இந்த நம்பர் வச்சு தான் உங்ககிட்ட பேசினாங்க .

எங்க ஆபீஸ் விட்டு நீங்க போனாலும் இந்த பழைய நம்பர் நீங்க யூஸ் பண்ணா நீங்க இன்னும் ஆபீஸ்ல தான் இருப்பீங்க அப்படின்னு நினைப்பாங்க. அதனால இனிமேல் இந்த செல் நம்பர நாங்க பார்த்துக்குறோம். எங்ககிட்ட இந்த நம்பர் இருக்கட்டும். நீங்க வேற நம்பர் வாங்கிக்குங்க என்று நிர்வாகத்தினர் சொன்னபோது

ஒரு செல் நம்பருக்கு போய் இப்படியா? இந்த செல் நம்பர் வச்சு நான் என்னப் செய்ய போறேன்? இந்த நம்பர்ல இருந்து பலபேர் கூட பேசினா நமக்கு ஏதாவது நல்லது நடந்திடுமா? அப்படிங்கற தப்பான எண்ணத்தை வச்சிருக்காங்க என்று நினைத்து வருத்தப் பட்டார்.

அந்த நிர்வாகம் நாராயணன் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள் என்று நினைத்தபோது அவர் முகத்தில் பளார் பளார் என்று அறைந்தது போல இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *