செய்திகள்

செல்லப் பிராணிகளுக்கும் ரஷியாவில் தடுப்பூசி பணி

மாஸ்கோ, மே 27–

ரஷியாவில் மனிதர்களைத் தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

கொரோனா தொற்று வவ்வால் மூலம் பரவியதாகவும் விலங்குகள் மூலம் பரவியதாகவும் தொடக்க காலத்தில் தகவல்கள் பரவி வந்தன. இதனால் பலர், தங்களிடம் இருந்த வளர்ப்பு பிராணிகளை தவிர்க்கும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் நல அமைப்புகள், தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், மக்களை பாதித்து வரும் கொரோனா பெருந்தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில், ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. அங்கு, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது இதுவரை முழுமை அடையாத நிலையில், வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

விலங்குகளுக்கு தடுப்பூசி

ஆனால், இதுவரை விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவியதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லை. இந்த நிலையில், ரஷ்யாவில் தங்களுடைய செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழுவான ரோசல்கோஸ்னாட்ஸர், மார்ச் மாதத்தில், விலங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும், இதனால், அவைகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது என்றும் கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *