வாழ்வியல்

செரிமானத்தைச் சீராக்கும் முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்துக்களும் தண்ணீரும் உள்ளன. நார்ச்சத்து மற்றும் தண்ணீர் இவை இரண்டும் குடல் அசைவுகளுக்கு உதவுவதால் மலச்சிக்கலை தடுக்க உதவும் .

மேலும் வெள்ளை முள்ளங்கி உங்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராட உதவும்.

முள்ளங்கி பூஞ்சை எதிர்ப்பு குணத்தை கொண்டுள்ளது.

மற்ற முள்ளங்கிகளைப் போலவே வெள்ளை முள்ளங்கி ஒரு இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு காய்கறியாகும்.

இது பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் வாய்வழி ஈஸ்ட் தொற்றுகள் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய பூஞ்சை பாக்டீரியாக்களைக் குறைக்கிறது.

மேலும் இது விலங்குகள் மற்றும் மனிதர்களில் இனப்பெருக்க சிக்கல்களைத் தரும் ஜென் என்று அழைக்கப்படும் நச்சுப் பூஞ்சையையும் குறைகிறது. எனவே இது ஆன்டி-ஆக்சிடன்ட் அளவுகளை மேம்படுத்தி இனப்பெருக்க பிரச்சனைகளை தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *