செய்திகள்

செய்யார் தொகுதி வேட்பாளர் தூசி மோகன் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம்

செய்யார், மார்ச் 18 –

செய்யார் தொகுதி வேட்பாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.

செய்யார் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் தூசி கே. மோகன் எம்.எல்.ஏ., வெம்பாக்கம் ஒன்றியம் அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்துல்லாபுரம், தூசி, குரங்கணில் முட்டம், பல்லாவரம், நத்த கொள்ளை, கனி கிலுப்பை, சேனியநல்லூர், மேனல்லூர், பூனை தாங்கள், சுருட்டல், சித்தாலப்பாக்கம், அரசாணை பாளையம், வயலாத்தூர், உக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

அண்ணா தி.மு.க. ஆட்சியில் செய்யாறு தொகுதியில் சிறப்பாக பணியாற்றியதால் இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிப்காட்டில் வேலை பார்த்து வருகின்றனர். நான் மீண்டும் வெற்றி பெற்றதும் இன்னும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வய்ப்பு ஏற்படுத்துவேன். அண்ணா தி.மு.க. அரசின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் உங்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். அண்ணா தி.மு.க. ஆட்சியில் செய்யார் தொகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து 20 கோடியில் தடுப்பணைகள், மாவட்ட மருத்துவமனை, மகப்பேறு பிரிவுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது வெண்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டீ ராஜி, நிர்வாகிகள் எம். மகேந்திரன், சி. துரை, எஸ். திருமூலன், டி.பி. துரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *