செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவை உயர்த்த நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, அக். 9–

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

செம்பரம்பாக்கத்தில் தற்போது 240 எம்.எல்.டி. தண்ணீர் உள்ளது. 7 ஆண்டு காலமாக இதனை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *