செய்திகள்

செம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் ஊடுபயிர் துவரை அறுவடை தீவிரம்

Spread the love

சின்னாளபட்டி, பிப்.12

செம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஊடுபயிராக பயிரிட்டு இருந்த துவரை பயிர்கள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.100க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, செம்பட்டி, ஆத்தூர், வக்கம்பட்டி, பாறைப்பட்டி, அக்கரைப்பட்டி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.

மக்காச்சோளத்தின் இடையே ஊடுபயிராக துவரம்பருப்பை பயிரிட்டு இருந்தனர். மக்காச்சோள அறுவடைக்கு பிறகும், வயல்களில் துவரைச்செடிகள் வளர்ந்த வண்ணம் இருந்தன. தற்போது துவரைச் செடியில் காய்கள் காய்த்து குலுங்குவதால் அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செம்பட்டி அருகே பாளையன்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் அமோகமாக விளைந்துள்ள துவரைச் செடியிலிருந்து பருப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல சின்னாளபட்டி அருகே பஞ்சம்பட்டி, பித்தளைப்பட்டி, கலிக்கம்பட்டி, செட்டியபட்டி உட்பட பல கிராமங்களில் துவரை பயிரை அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில் மக்காச்சோளம், கம்பு, மொச்சை உட்பட பயிர்கள் பயிரிடும் போது ஊடுபயிராக துவரையை நடுவது வழக்கம். காரணம் துவரைச் செடியை வேருடன் பிடுங்கும்போது அடிமண் மேலே வந்துவிடும். ஏர் உழுதது போல் வயல்களுக்கு மண் கலவை ஏற்படும். இதனால் தொடர்ந்து விவசாயிகள் 50 வருடங்களுக்கு மேலாக மக்காச்சோளம் மற்றும் கம்பு, கேழ்வரகு பயிரிடும் போது துவரையை நடவு செய்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *