சிறுகதை

சென்னை Vs சென்னை – ராஜா செல்லமுத்து

சென்னை நாள் வெகுவாக கொண்டாடப்பட்டது . முன்பு இருந்ததை விட, தற்போது இருக்கும் விரிந்து பரந்த கட்டிடங்கள் . பிரிந்து பரந்த தார் சாலைகள் . எங்கு பார்த்தாலும் கண் சிமிட்டும் மின்விளக்குகள். சிசிடி கேமரா என்று சென்னையை வித்தியாசமாக இருந்தது. போக்குவரத்தும் மாற்றம் ஏற்பட்டது.

ரயில் ,மெட்ரோ ரயில் ஓடுகிறது.

மக்களின் வாழ்க்கை முறை வாழ்க்கைத் தரம், வசதி வாய்ப்புகள் தற்பாேது மாறியிருந்தன.

இப்போது இருக்கும் சென்னையை பார்த்து வியந்த மக்கள் சென்னை நாள் கொண்டாடிய போது

100 வருடத்திற்கு முன்னால் இருக்கும் சென்னையை கண் முன்னிறுத்தினார்கள்.

புகைப்படங்கள் எல்லாம் பேசும் படங்களாக காட்சி அளித்தன. ஜட்கா வண்டி ,குதிரை,மாட்டு வண்டி,லாந்தர் விளக்குகள், பஸ் வசதி இல்லாத இருட்டு கிராமம். மணிக்கூண்டு. மனிதர்களின் உடைகள் ,உணவு என்று பழைய சென்னை அப்படியே அவர்கள் கண்களில் விரிந்தன.

அதற்குள் பயணித்த இந்த கால நவநாகரீகம் மனிதர்கள் , அந்தக் கால உடையில் சென்று பழகி சென்னையை தரிசித்து வந்தார்கள்.

எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லை.. விபத்துக்கள் இல்லை கார்பன் டை ஆக்சைடு, குப்பை கூளம் எதுவும் இல்லை. சுத்தமாக இருந்தது சென்னை .

மாசுபடாத காற்று. எங்கும் மரங்கள். குளங்கள். தண்ணீர் நிலைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்தது.

இந்த பழைய சென்னை ரம்யமாகவும் ஒரு கிராமம் போல இருந்தது.

பழைய சென்னைக்குள் சென்று திரும்பி அவர்கள் மீண்டும் புதிய சென்னைக்கு வந்தார்கள்.

100 டிகிரி தாண்டிய வெப்பம். ஊரைச் சுற்றி ஓடும் கூவம் நதி. சுத்தம் இல்லாத பொருட்கள். வாகன நெரிசல் எங்கும் மனிதர்கள்.

பழைய சென்னைக்குள் போய் மீண்டும் திரும்பியவர்கள், புதிய சென்னையைப் பார்த்து வெறுப்படைந்து இதுதான் வாழ்க்கை என்று தீர்மானித்தார்கள்.

பழைய சென்னை மீண்டும் வருமா? என்ற ஏக்கத்தோடு பழைய சென்னையிலிருந்து வெளியேறி மீண்டும் புதிய சென்னைக்குள் நுழைந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *