சென்னை, ஜூன் 30–
இன்று சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய ரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய குடியிருப்புகள், புதிய சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டுத் திடல் மேம்படுத்துதல் என “ஒருங்கிணைந்த வளாகம்” பணிகளை துரிதபடுத்தும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு, சி.எம்.டி.ஏ. தலைமை திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர்கள் ராஜமகேஷ்குமார், பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
![]()





