செய்திகள்

சென்னை வந்தடைந்த 3 தேசிய பேரிடர் மீட்பு படைகள்

சென்னை, நவ. 9

கனமழையால் தத்தளிக்கும் சென்னைக்கு, அரக்கோணத்தில் இருந்து 3 தேசிய பேரிடர் மீட்பு படைகள் வந்துள்ளன.

சென்னையில் தொடர்ந்து பெய்தவரும் கனமழை காரணமாக நகரின் முக்கிய பகுதிகள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிவாரண பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னைக்கு விரைந்துள்ளனர். மேலும் 3 குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மணலி, தாம்பரம், பெரும்புலிபாக்கம் பகுதிகளில் தலா ஒரு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *