செய்திகள்

சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பிரவேஷ் குமார் நியமனம்

Makkal Kural Official

சென்னை, மார்ச்.21-–

சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பிரவேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஐ.ஜி.க்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* நரேந்திரன் நாயர் –- சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும் விரிவாக்க பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* லட்சுமி- – விரிவாக்க பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* பிரவேஷ் குமார் –- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் இவர் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *