செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 42 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Spread the love

சென்னை, பிப்.13–

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய நிறுவனங்களிடமிருந்து இதுநாள் வரை ரூ.18 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, 42 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இதுநாள்வரை ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டம் –49 முதல் 63 வரையுள்ள 15 கோட்டங்களில் பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தினசரி தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, நெகிழி தடை ஆணையை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதுவரை 18,991 தொழில் நிறுவனங்களில் கள ஆய்வு செய்யப்பட்டு, ரூ.18,01,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 42 டன் அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டீக்கடையில் திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகில் உள்ள ஸிடென்ஹாம்ஸ் சாலையில் 11–ந் தேதி பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டபோது க.எண்.51ல் இயங்கிவரும் கஃபேசோன் என்ற தேனீர் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பூசப்பட்ட தேனீர் குவளைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது, ஏற்கனவே இந்த தேனீர் கடையில் இரண்டு முறை தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சி தொழில் உரிமம் பெறாமல் தேனீர் கடை நடத்தி வந்ததாலும், மூன்றாவது முறையாக தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தியற்காக அபராதம் விதிக்கப்பட்டதாலும், கஃபேசோன் தேனீர்கடை இராயபுரம் மண்டலம், பொதுசுகாதாரத்துறை அலுவலர்களால் அந்தக் கடை மூடப்பட்டது எனவே, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் சுற்றுப்புறத்தையும், பொதுமக்கள் உடல்நலத்தையும் பேணி காக்க ஒத்துழைப்பு அளிக்குமாறும், இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *