செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

Makkal Kural Official

சென்னை, அக்.5-

சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை பார்வையிடு வதற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கூடுதல் கமிஷனர்கள் டாக்டர் கண்ணன், நரேந்திரன் நாயர், சுதாகர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விமானப்படை சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மொத்தம் 8 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட முடிவு செய்யப்பட்டது.

அதே போன்று போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் அருகே பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

* திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சர்தார்படேல் சாலை காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையை பயன்படுத்தலாம்.

இதே போன்று பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்லலாம்.

* அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மாநகர பஸ்கள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே சந்திப்பு, ஐஸ்அவுஸ், டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அடையார் கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, டி.டி.கே. சாலை, ஆர்.கே.சாலை வழியாக அண்ணாசாலையை வந்தடைந்து தங்கள் இலக்கை அடையலாம்.

22 இடங்களில் வாகன நிறுத்தம்

* வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்படும்.

* மக்கள் கூட்டம், வாகனங்கள் நெரிசல் ஏற்படும் என்பதால் மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், பறக்கும் ரெயில்கள் போன்ற பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

22 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *