செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில்களில் பிப்ரவரியில் 63.69 லட்சம் பேர் பயணம்

சென்னை, மார்ச் 1–

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயண செய்தோர் எண்ணிக்கை

மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:-

01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2023, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளார்கள் .

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *