செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜூன் 27–-

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 23–-ந் தேதியன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 503 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில், அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 23 ஆயிரத்து 745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 14 ஆயிரத்து 935 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 14 ஆயிரத்து 938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 13–-ந் தேதியன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 10-ந் தேதியன்று 2 லட்சத்து 61 ஆயிரத்து 668 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 10-ந்தேதியன்று 2 லட்சத்து 58 ஆயிரத்து 671 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 28-ந் தேதியன்று 2 லட்சத்து 68 ஆயிரத்து 680 பயணிகளும், மே மாதத்தில் அதிகபட்சமாக 24-ந்தேதியன்று 2 லட்சத்து 64 ஆயிரத்து 974 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *