சென்னை, அக். 6–
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து ஆந்திரா கூடூர் ரெயில் நிலையம் வரை 146 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
தெற்கு ரெயில்வேயில், பல்வேறு வழித்தடங்களில் ரெயில் பாதை மேம்படுத்துவது, கூடுதல் பாதைகள் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. அதற்கேற்ப ரெயில்களின் வேகமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சென்ட்ரல் – கூடூர் தடத்தில் மணிக்கு 146 கி.மீ., வேகத்தில் ரெயிலை இயக்கி இன்று சோதனை நடத்தப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த ரெயில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மால்யா, சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பயணம் செய்து ஆய்வு செய்தனர்.
ரெயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர், ரெயில் பாதையின் தரம், சிக்னல் தொழில்நுட்பம், ரெயில் நிலையங்கள் கடந்து செல்லும் நேரம் உள்ளிட்டவை விபரங்களை சேகரித்து, அறிக்கையாக அளிப்பர். இந்த தடத்தில், வாரிய ஒப்புதல் பெற்று, படிப்படியாக ரயில்களின் வேகம் அதிக்க உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.