சென்னை, ஜூலை 3–
சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மேள தாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னை காமராஜர் சாலை உள்ள மாநிலக் கல்லூரியில் முன்னாள் மாநிலக்கல்லூரி மாணவர்கள் சங்கம் சார்பில் மாநிலக்கல்லூரிக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக இதுவரையில் எந்த கல்லூரியிலும் நடத்தாத வகையில் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக கல்வி இயக்குனர் கார்மேகம் கலந்து கொண்டார்.
முதல் நாள் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் எந்த வித பயமும் பதற்றமும் ஏற்படாத வகையில் கல்லூரி வாயிலில் சிகப்பு கம்பளம் அமைத்தும், நாதஸ்வரம், தவில் போன்ற மங்கள இசையுடன் முன்னாள் மாணவர்கள் வரவேற்றனர். மேலும் கல்லூரி புகைப்படத்துடன் கூடிய இந்த கல்வியாண்டுக்கான காலண்டர் வழங்குதல், முதல் நாள் கல்லூரிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும சிற்றுண்டி வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
கல்வி இயக்குனர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதிலும் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கபட்ட நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மாணவர்களுக்கு பள்ளியையும் கல்லூரியையும் இணைக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி ஒன்று நடைபெற உள்ளது.
இந்த புத்தாக்க பயிற்சியில் மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் கண்காணிப் பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் கல்லூரி பற்றிய பதட்டம் பயத்தை போக்கும் வகையில் நடத்தப்படும்.
கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் துணைவேந்தர்கள் மாநாடு ஒன்று நடத்தினார். மற்ற துறை படிப்புகளுக்கு தனியாக பல்கலைக்கழகம் இருக்கின்றது ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டும் பத்து பல்கலைக்கழகங்கள் அந்தந்த பகுதகளில் இருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடும்போது முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கும் வேலைக்கு செல்வதற்கும், இந்திய அளவில் நடக்கின்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கும், பல சிரமங்கள் இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாயிலாக தெரியவந்து.
இதைப் பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எனவே அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த கல்வியாண்டு பணிகளை அடுத்து வரும் மே மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநிலக்கல்லூரி பொறுப்பு முதல்வர், கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் ஆர்.ராமன், மாநிலக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ரூஸ் வெல்ட், துணைத் தலைவர்கள் ராஜராஜன், சந்திரமோகன் பொதுச் செயலாளர் எம்.ஆர். இளங்கோவன், செயலாளர் வாசுதேவன், பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.