செய்திகள்

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்

Makkal Kural Official

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை, கடும் விமர்சனங்கள் எதிரொலி

* சந்தீப்ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம்

* சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன்

சென்னை, ஜூலை 8–

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை மற்றும் இதுதொடர்பாக எழுந்த கடும் விமர்சனங்களை அடுத்து காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (5–ந் தேதி) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர்.

கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை நடந்­ததும் கமி­ஷனர் சந்­தீப்­ராய் ரத்­தோர் நேரடி மேற்­பார்­வையில் 10 தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்டு கொலை­யா­ளி­கள் உட­ன­டி­யாக 8 பேர் கைது செய்­யப்­பட்­டனர். ஆர்ம்­ஸ்ட்ராங் இறுதி ஊர்­வ­லத்தின் போது வன்­மு­றைகள் வெடிக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. கமிஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் நேர­டி பார்­வையில் கூடுதல் கமி­ஷனர் ஆஸ்­ரா கார்க் தலை­மையில் தீவிர போலீஸ் பாது­காப்புப் பணியில் காவல்­து­றை­யினர் ஈடு­பட்­டி­ருந்­தனர். இதனால் எந்த வித சல­ச­லப்பும் இன்றி ஆர்ம்­ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் அமை­தி­யாக நடந்து முடிந்­தது.

இந்த நிலையில், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் தேதி சென்னை நகர போலீஸ் கமி­ஷ­ன­ராக சந்­தீப்ராய் ரத்தோர் பதவி ஏற்றார். ஓராண்­டுகள் நிறை­வ­டைந்த நிலையில் சந்­தீப்ராய் ரத்தோர் மாற்­றப்­­பட்­டுள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ் புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

110வது கமிஷனராக

அருண் நியமனம்

இதன்மூலம் 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்கவுள்ளார். 1998 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி அருண். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார். ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின்னர் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றினார் அருண்.

சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் வெகுவாக பாரட்டப்பட்டது. துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார. மேலும் தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார் அருண். 2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பாராட்டுகளைப் பெற்றது.

ஆவடி முதல் கமிஷனர்

2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார் அருண். இதையடுத்து கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண். தமிழ்நாடு முழுவதும் குற்றங்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் மேற்கொண்டு வந்தார். பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அருண். மே­லும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜி­பி­யாக கொம்பன் ஜெகன் உள்­ளிட்ட ரவு­டி­களை என்­க­வுன்டர் நட­வ­டிக்கை மூலம் முடிவு கட்­டிய பெருமை அரு­­ணுக்கு உண்டு. இன்று அல்­லது நாளை அருண் பதவி ஏற்பார் என தெரி­கி­ற­து.

சட்டம் ஒழுங்கு

ஏடிஜிபியாக டேவிட்சன்

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடைடையே தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *