செய்திகள்

சென்னை மாநகராட்சியில் வெளிப்படையான டெண்டர் முறை: ஒப்பந்ததாரர்கள் நன்றி

சென்னை, ஜுலை 3–

சென்னை மாநகராட்சியில் வெளிப்படையான டெண்டர் முறையை கொண்டு வந்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடிக்கு ஒப்பந்ததாரர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டின் புதிய முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, அவர் தலைமையிலான அரசு, அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சியில் வெளிப்படையான டெண்டர் முறையை அமல்படுத்தியுள்ளார்.

இந்த வெளிப்படையான டெண்டர் முறையை அமல்படுத்தியதற்காக, சென்னை பெருநகர மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் டி.வெற்றிவேல் மற்றும் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துணை ஆணையர் (பணிகள்) ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இதே போன்று அனைத்து ஒப்பந்தங்களுக்கும் வெளிப்படையான டெண்டர் முறையை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பல்வேறு மண்டலங்களில் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை விரைந்து முடிக்கவும், நிலுவையில் உள்ள ஒப்பந்த பட்டியல் தொகையினை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கிட விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

2 கோடி வரையிலான டெண்டர்களுக்கு பிகியூவை தவிர்க்க வேண்டும், ஒப்பந்தங்களுக்கு மிஷினெரி சான்றிதழை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஆலோசனை செய்து விரைந்து முடிவெடுப்பதாகவும், மேலும் ஒப்பந்தத்தின் முன்வைப்பு தொகையை அந்தந்த துறைகளில் சமர்பிப்பதில் உள்ள தடங்கள்களை எடுத்து கூறியதற்கு ஆன்லைன் மூலமாக செலுத்த ஆவணம் செய்யப்படும் என ஆணையர் உறுதியளித்துள்ளதாக ஒப்பதகாரர்கள் நலசங்கத்தின் தலைவர் வெற்றிவேல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *