சென்னை, ஜூலை 10–-
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டாலும் ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று 1,207 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பினார். இதனால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக நீடிக்கிறது. இதைபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.