செய்திகள்

சென்னை புதிய கலெக்டராக ரஷ்மி சித்தார்த் ஜகடே நியமனம்

சென்னை, செப்.8-

சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரஷ்மி சித்தார்த் ஜகடே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் நந்தகோபால், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாறு ஆராய்ச்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கலெக்டராக இருந்த அருணா, நீலகிரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நில நிர்வாக இணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனிஷ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரி சித்ரா விஜயன், தமிழ்நாடு ஊரக மாற்று திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட இயக்குனராகவும் பணியாற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *