செய்திகள்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று கால்பந்து போட்டி: போக்குவரத்து மாற்றம்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 30–

சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு பிரேசில் லெஜண்ட்ஸ் -– இந்தியா லெஜண்டஸ் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு;

இன்று ஜவஹர்லால் நேரு வெளிப்புற மைதானத்தில் (பிரேசில் லெஜண்ட்ஸ் – இந்தியா லெஜண்டஸ்) கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியினை காண 20,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள், வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வாகன நிறுத்தத்திற்கான இடம் குறைவாக இருப்பதால் பார்வையளர்கள் பொது போக்குவரத்துகளான சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், புறநகர் ரெயில்கள் மற்றும் மாநகர போக்குகரத்துகளை பயன்படுத்தி அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள விளையாட்டு மைதானத்தை நடந்து அடையலாம். வி.பி பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை வழியாக சென்று மைதானத்தின் பின்புற நுழைவு வழியாக மைதானத்தை அடையலாம் பார்வையாளர்கள் இராஜாமுத்தையா சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சென்ட்ரல் ரெயில் நிலைய மார்க்கமாக கார்/பைக்குகளில் வரும் பார்வையாளர்கள் பார்க் சாலையில் (விக்டோரியா ஹால் சாலை) வலதுபுறம் திருப்பி மைதவனத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான ‘பி’ மைதானம் மற்றும் \”சி\” மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம். இராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்படும். அதற்கு பதிலாக அவ்வாகணங்கள் ஈ.வி.ஆர் சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலை, டவுட்டன், நாரயாணகுரு சாலை, சூனை நெடுஞ்சாலை மற்றும் டெமெல்லஸ் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

எழும்பூர் ரெயில் நிலைய மார்க்கமாக வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் நேராக சென்ட்ரல் ரெயில் நிலையத்தை நோக்கிச் சென்று பார்க் சலை (விக்டோரியா ஹால் சாலை) இடதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக நிறுத்துமிடமான ‘பி’ மைதானம் மற்றும் சி ” மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருத்து விளையாட்டு மைதானத்தை அடைபளம்.

அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூனை ரவுண்டானாவிலிருந்து நேகு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் இலக்கை அடைய சூளை நெடுஞ்சா, ஈ.வி.கே சம்பத் சாலை, ஈ.சி.ஆர். சாலை வழியாக திருப்பி விடப்படுவார்கள் மேலும், அதிக போக்குவரத்து நெரிசலின் போது ஜெர்மியா சாலை – வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *