தென்னக ரயில்வே தகவல்
சென்னை, ஜூலை 13–
சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை இரவு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் என்ற நகரத்திற்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 14 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தாம்பரத்திலிருந்து இந்த சிறப்பு ரயில் கிளம்பும் என்றும் இந்த ரயில் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகருக்கு ஜூலை 17ஆம் தேதி காலை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தேவையில்லை
அதேபோல் மறு மார்க்கமாக ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகரில் இருந்து ஜூலை 18ஆம் தேதி கிளம்பி ஜூலை 20ஆம் தேதி சென்னை தாம்பரம் வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக கவுண்டர்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வட மாநில தொழிலாளர்களுக்காக இந்த சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.