செய்திகள்

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி மாணவர்களின் ஓவியம், புகைப்படக் கண்காட்சி

சென்னை:-

சென்னையில் உள்ள துவாரகாதாஸ் கோவர்த்தன் தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்களின் ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சி சென்னை க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித் கலா அகாடமியில் நடந்தது. 150 மாணவர்கள் தத்தம் கைவினைத் திறனையும், கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தி இருந்தனர். சுமார் 100 புகைப்படங்களும், 50 ஓவியங்களும் காட்சியில் இருந்தன. பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட் ராம் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். வைஷ்ணவ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கணேசன், பொருளாளர் அசோக் கேடியா, விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் தலைவர் ஜி. வசந்தி ஆகியோர் பங்கேற்றார்கள்.

நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் கண்டு கொண்டிருந்கிறோம். அதற்கேற்ப நாம் நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு, புதிய சூழலுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வெங்கட்ராம் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். 16ந் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *