செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்தான் இந்தியாவிலேயே நீளமான பெயர் கொண்டது

Makkal Kural Official

சென்னை, டிச. 27–

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் தான் இந்தியாவில் மிக நீளமான பெயரை கொண்ட ரெயில்வே நிலையமாக உள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த மிக பெரிய அளவிலான பரந்த ரயில்வே நெட்வொர்க்கிற்கு மத்தியில், இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை ஒரு ரயில் நிலையம் பெற்றுள்ளது.

உலகிலேயே நான்காவது பெரிய ரெயில்வே இணைப்புகள் கொண்டிருக்கும் நாடாக இந்தியா உள்ளது. 1,32,310 கிலோ மீட்டர்கள் (82,210 மைல்கள்) நீளம் கொண்ட ரெயில் பாதை மற்றும் 7,335 ரெயில் நிலையங்களை உள்ளடக்கியது நமது இந்திய நாட்டின் ரயில்வே இணைப்புகள்.

சென்னை சென்ட்ரல்

இந்த மிக பெரிய அளவிலான பரந்த ரயில்வேவுக்கு இடையில், இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரெயில் நிலையம் என்ற பெருமையை தமிழ்நாடு தான் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருக்கும் மிக முக்கியமான ரெயில் நிலையம் தான் நாட்டிலேயே மிக நீளமான பெயரை கொண்டிருக்கும் ரெயில்வே ஸ்டேஷனாக உள்ளது.

உலகின் மிக நீளமான பெயரை கொண்ட ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும், மிக நீளமான பெயரை கொண்டிருக்கும் ரெயில் நிலையமாகவும் சென்னை சென்ட்ரல் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் ““புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம்” (Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *