செய்திகள்

சென்னை சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி

சென்னை,மே.13

சென்னை சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மயிலாப்பூர் நொச்சி குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 22). திருவான்மியூரில் ஐடி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். இதேபகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் விஷ்ணு(வயது 23),பாரதிராஜா(வயது 22), முத்து(வயது 24). இவர்கள் 4 பேரும் நேற்று இரவு குடித்துவிட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். சாந்தோம் அருகே பாபநாசம் சிவன் சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபோது, நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதினர்.

இதில் காயமடைந்த வெங்கடேஷ், விஷ்ணு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பாரதிராஜா, விஷ்ணு ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *