செய்திகள்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில்கள் ரத்து

Makkal Kural Official

பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

சென்னை, ஜூலை 27–

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. அதாவது, 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்புகள் ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல, கூடுவாஞ்சோியிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சோிக்கு இரவு 11 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ரெயில்கள் ரத்து காரணமாக மாநகர பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக கூடுதல் பேருந்துகளை இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *