சென்னை, டிச.7-
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்களுக்கான கேம்பஸ் பிளேஸ்மென்ட் நிகழ்வு நடைபெற்றது. இதில், சென்னை ஐ.ஐ.டியில் படித்த மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி பிளேஸ்மென்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. பிரபல வால் ஸ்ரீட் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ரீட் நிறுவனம் அந்த மாணவருக்கு மாதம் ரூ.35.80 லட்சம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோல், பிளாக் ராக், கிளீன், டான்வின்சி போன்ற பிரபல நிறுவனங்களும் பல மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது.