செய்திகள்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்பட 4 தலைமை நீதிபதிகள் இடமாற்றம்

Makkal Kural Official

சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை

புதுடில்லி, மே 28–

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்பட 4 தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதிகள் விபரம் பின்வருமாறு:

* ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள மணீந்திர மோகனை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள அப்ரேஷ் குமார் சிங்கை தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ராசந்திர ராவை திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராமை, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐகோர்ட் நீதிபதிகள் 21 பேரை இடமாறுதல் செய்ய நேற்று கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில் இன்று தலைமை நீதிபதிகள் 4 பேரை இடமாறுதல் செய்து பரிந்துரைத்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *