அறிவியல் அறிவோம்
சென்னை ஐஐடியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 60 மாணவர்களின் புதுமையான தொழில்நுட்பங்கள் ,புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை ஐஐடியில் மேலும் இந்த தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்போன்று சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை ஐஐடியில் கற்பிக்கப்படும் பி.எஸ்சி ஆன்லைன் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியுமா? எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சென்னையில் நீர்த்தேக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.