செய்திகள்

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா

சென்னை, ஏப். 29–

சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில் அந்தப் பாதிப்பு பலருக்கும் பரவியது. இதையடுத்து ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகளின்படி நேற்று வரை 171 பேருக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.