சென்னை, நவ. 30–
பெஞ்ஜல் புயல் மழையால் சென்னை ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 449 கன அடியாக இருந்த நீர்வரத்து பகலில் 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது.
மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,313 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு இருக்கிறது. ஏரியின் ஒட்டு மொத்த உயரமான 24 அடியில் நீர்மட்டம் 18.82 அடியாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக 4 மணி நேரத்தில் 8 மடங்காக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 333 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இதில் 2367 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 197 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இதில் 122 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 58 கனஅடி தண்ணீர் வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 540 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 460 கனஅடி தண்ணீர் வருகிறது. 127 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 302 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 45 கன அடி தண்ணீர் வருகிறது. 15 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கத்துக்கு 3,745 கன அடி நீர்வரத்து
––––––––––––––––