செய்திகள்

சென்னை ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து தாய், மகன் உள்பட 3 பேர் பலி

இறந்தவருக்கு திதி கொடுக்க துபாயிலிருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

சென்னை, நவ. 4–

சென்னை ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்ததன் காரணமாக தாய், மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர்ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு திதி கொடுப்பதற்காக துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா ( 63) அவரது தங்கை ராதா (55), அவரது தம்பி ராம்குமார் (47), ராம்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த 2–ந் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.

நேற்றிரவு கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் ஒரு அறையிலும், பார்கவி மற்றும் அவரது குழந்தை ஆராதான ஆகியோர் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக, அந்த வீட்டிலிருந்த பிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியதைத் தொடர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது மூச்சு திணறி கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கூடுவாஞ்சேரி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரிட்ஜ் வெடித்து அதிலிருந்த கம்ப்ரஸரில் இருந்த கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த வெங்கட்ராமனின் வீடு கடந்த ஒரு ஆண்டாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு பின் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தியதால், எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது.

துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள், பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *