செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றம்: 4 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை, அக்.13-

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் தற்போது 56 நீதிபதிகள் உள்ளனர். 19 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வக்கீலாக பணியாற்றிவரும் ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபி ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து மத்திய அரசின் பரிந்துரையின்படி, 4 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த 4 பேரும் விரைவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவர்கள் 4 பேரும் பதவி ஏற்றவுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துவிடும். ஸ்ரீமதி சுந்தரம் நீதிபதியாக பதவி ஏற்கும்போது, உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *