செய்திகள்

சென்னை, ஈரோடு உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சென்னை, செப்.19-

தமிழகத்தில் சென்னை, ஈரோடு உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 938 ஆண்கள், 715 பெண்கள் என மொத்தம் 1,653 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 204 பேரும், கோவையில் 201 பேரும், ஈரோட்டில் 139 பேரும், செங்கல்பட்டில் 131 பேரும், திருப்பூரில் 94 பேரும், தஞ்சாவூரில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்சமாக விருதுநகர், ராமநாதபுரத்தில் தலா 7 பேரும், தென்காசியில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்பட 19 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்பட 19 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 683 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 19 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேரும் என 22 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 310 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 369 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 123 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 172 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 664 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,581 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 91 ஆயிரத்து 480 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 893 பேர் உள்ளனர்.

இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 42 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *