சென்னை, செப். 13–
சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் தண்டவாள சீரமைப்புப் பணி காரணமாக 9 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுவதால், இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 9 மின்சார ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக பயணிகள் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை நேரம் என்பதால் சென்னை புறநகர் பகுதியான அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதியிலிருந்து சென்னையில் பணிகாரணமாக வரும் ஏராளமான பயணிகள் அவதிப்பட்டனர்.
இன்று, காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் – கடம்பத்தூர், காலை 9.10 மணிக்கு சென்னை சென்டிரல் – திருவள்ளூர், காலை 10 மணிக்கு சென்னை சென்டிரல் – திருவள்ளூர், காலை 10.25 மணிக்கு கடம்பத்தூர் – சென்னை சென்டிரல், காலை 11 மணிக்கு சென்னை சென்டிரல் – கடம்பத்தூர், காலை 11.10 மணிக்கு திருவள்ளூர் – சென்னை சென்டிரல், காலை 11.35 மணிக்கு கடம்பத்தூர் – சென்னை சென்டிரல், மதியம் 12.35 மணிக்கு திருவள்ளூர் – சென்னை சென்டிரல், மதியம் 1.25 மணிக்கு கடம்பத்தூர் – சென்னை சென்டிரல் ஆகிய நிலையங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
இதேபோல காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06727) பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரல் – கடம்பத்தூர் இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.