செய்திகள் வர்த்தகம்

சென்னை அப்பல்லோவில் ‘‘ஸ்புட்னிக் வி’’ போடும் பணி துவக்கம்

சென்னை, ஜூன்.19-

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அப்பல்லோவில் மருத்துவமனையில் ரஷ்யாவின் ‘‘ஸ்புட்னிக் வி’’ கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்தியாவில் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கிடையில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியின் உற்பத்தி ஐதராபாத்தில் துவங்கியது.

அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலான ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திடம் இருந்து ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியை அப்பல்லோ மருத்துவமனை கொள்முதல் செய்தது. தமிழகத்தில் முதல்முறையாக ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசி போடும் பணி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. ஒரு தவணை தடுப்பூசி அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி ரூ.1,145க்கு வழங்கப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசிக்கும் 2வது தவணை தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி 3 வாரங்களாக உள்ளது. ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியின் செயல்திறன் 91.6% ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *