செய்திகள்

சென்னை, அகமதாபாத் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறைபாடு

டெல்லி, ஜூலை 10–

சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலைய இயக்குநர்களுக்கு விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விமான ஒழுங்குமுறை அமைப்பான டி.ஜி.சி.ஏ இம்மாத தொடக்கத்தில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன் மூலம் சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

15 நாளில் விளக்கம் வேண்டும்

இந்தச் சூழலில் சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களின் இயக்குநர்கள் சந்திரமவுலி மற்றும் மனோஜ் கங்கல் ஆகியோருக்கு டி.ஜி.சி.ஏ ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான விஷயங்கள் பராமரிக்கப்படவில்லை என்று அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் விமானங்கள் தரையிறங்கும்போது ஓடுபாதைகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அண்மையில், மழையால் பாதிக்கப்பட்ட மும்பை விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதையில் மூன்று நாட்களுக்குப் போக்குவரத்துக்கு மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *