செய்திகள்

சென்னையில் 4 இடங்களில் மின் திருட்டு; ரூ.17½ லட்சம் அபராதம்

சென்னை, மே.14-

சென்னையில் 4 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு ரூ. ரூ.17½ லட்சம் அபராதம் விதித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை தெற்கு மின் பகிர்பான வட்டத்துக்கு உட்பட்ட ‘ஐ.டி காரிடர்’ பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் முறைகேடாக 4 இடங்களில் மின்சாரம் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 இடங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 943 இழப்பீடாகவும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்கு உரிய சமரசத்தொகை ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 57 ஆயிரத்து 943 அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.