சென்னை, நவ. 26–
சென்னையில் இன்று 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், மத்திய அரசு முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
ராயப்பேட்டையில் தனியார் நிறுவன மேலாளர் சேகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற துறைமுக இணை இயக்குனர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடந்தது. அயப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் வீடுகளுக்கும் சென்றனர். வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எந்த வழக்கு தொடர்பாக இவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.