செய்திகள்

சென்னையில் 2வது நாளாக 214 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சென்னை, ஜூலை.13-

சென்னையில் 2வது நாளாக 214 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அவர்களில் 18 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் நிர்வாக ரீதியாக அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் நடக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை இந்த மாறுதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். போலீஸ் துறையிலும் இந்த மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 214 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் விஷேச பிரிவு இன்ஸ்பெக்டர்கள் 179 பேர்களும், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் 35 பேரும் இந்த மாறுதல் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மாற்றப்பட்டவர்களில் 18 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் இது போன்ற மெகா மாற்றங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மாற்றத்திற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு பிரிவில் மட்டும் 65 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம், மாற்றப்பட்ட போலீஸ் நிலையம் விவரம் வருமாறு:-

1.ஆதவன்பாலாஜி- – கோடம்பாக்கம். 2.அழகு- – ஆதம்பாக்கம். 3.நெடுமாறன்-பட்டினபாக்கம். 4.கண்ணன்-வேப்பேரி. 5.முகமது பரக்கத்துல்லா-பெரியமேடு. 6.புகழேந்தி-சேத்துப்பட்டு. 7.இ.ராஜேஸ்வரி-டி.பி.சத்திரம். 8.ஸ்டாலின்-அண்ணாசதுக்கம். 9.சிவமணி-சிந்தாதிரிப்பேட்டை. 10.ஜானி செல்லப்பா-எழும்பூர். 11.சேட்டு-நுங்கம்பாக்கம். 12.மோகன்தாஸ்-ஆயிரம்விளக்கு. 12.வெற்றிச்செல்வன்-சூளைமேடு. 13.பழனிவேல்-கோட்டை. 14.விஜயன்-துரைப்பாக்கம். 15.மீனாட்சிசுந்தரம்-அடையாறு. 16.ரமணி-சாஸ்திரிநகர். 17.சண்முகசுந்தரம்-வேளச்சேரி. 18.மகேஷ்குமார்-நீலாங்கரை. 19.சரவணன்-சைதாப்பேட்டை. 20.வி.சீனிவாசன்-செம்மஞ்சேரி.

21.ஆல்பின்ராஜ்-கண்ணகிநகர். 22.வேலு-கானாத்தூர். 23.கோவிந்த்-மயிலாப்பூர். 24.பத்மாவதி-கே.கே.நகர். 25.பலவேசம்-எம்.ஜி.ஆர்.நகர். 26.ஜோசிம் ஜெர்ரி-பரங்கிமலை. 27.விஜயகுமார்-நந்தம்பாக்கம். 28.வெங்கடேசன்-பல்லாவரம். 29.ராஜ்குமார்-சங்கர்நகர். 30.புருசோத்தமன்-பேசின்பிரிட்ஜ். 31.கிளாட்சன் ஜோஸ்-முத்தையால் பேட்டை. 32.ரஞ்சித்குமார்-சிட்லபாக்கம். 33.கே.விஜயகுமார்-பீர்க்கன்கரணை. 34.நடராஜ்-சேலையூர். 35.மகுடீஸ்வரி-பெரும்பாக்கம். 36.ஷோபனா-பூக்கடை. 37.வீரக்குமார்-யானைக்கவுனி. 38.என்.எஸ்.குமார்-பள்ளிக்கரணை. 39.தேவராஜ்-கொத்தவால்சாவடி. 40.அலெக்ஸ்-எஸ்பிளனேடு. 41.அம்பத்தூர்-ராமசாமி. 42.ரவி-ஆர்.கே.நகர். 43.பூபாலன்-ராயபுரம். 44.இளங்கோ-காசிமேடு. 45.பி.சீனிவாசன்-புழல். 46.ராஜாராபர்ட்-மணலி. 47.பாலன்-சாத்தங்காடு. 48.கிருபாநிதி-அமைந்தகரை. 49.ராஜேஷ்பாபு-அண்ணாநகர். 50.ஜி.பிரபு-அரும்பாக்கம். 51.சிபுகுமார்-திருமங்கலம். 52.முத்துராமலிங்கம்-திரு.வி.க.நகர். 53.சந்திரசேகர்-கோயம்பேடு. 54.விஜயராகவன்-வில்லிவாக்கம். 55.ஏ.கண்ணன்-ராஜமங்கலம். 56.சார்லஸ்-தாம்பரம். 57.ராஜீவ் பிரின்ஸ் ஆரோன்-கொரட்டூர். 58.ராஜி-முத்தாபுதுப்பேட்டை. 59.சிவகுமார்-நசரத்பேட்டை. 60.சிதம்பரமுருகேசன்-பூந்தமல்லி. 61.மல்லிகா-அம்பத்தூர் எஸ்டேட். 62.அம்பேத்கார்-எம்.கே.பி.நகர். 63.ஜவஹர்-கொடுங்கையூர். 64.அய்யப்பன்-செம்பியம். 65.பிரவீன்ராஜேஷ்-வடபழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *