சென்னை, பிப். 22–
சென்னை நொளம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நொளம்பூரில் வசித்து வருபவர் தொழிலதிபர் சிவக்குமார். நேற்றிரவு இவரது வீட்டின் பூட்டை கருங்கல்லால் உடைத்த மர்ம கும்பல், வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த 150 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரைவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.